நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

“BATTLE OF THE BLUES” 2025 – வெற்றி சென்.தோமசுக்கு உரித்தானது.
கொழும்பு எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நேற்று (மார்ச் 08) முடிவடைந்த 146வது”BATTLE OF THE BLUES” என அழைக்கப்படும் நீலவர்ணங்களின் சமரில் றோயல் கல்லூரியினை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென். தோமஸ் அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் இதுவரை நடைபெற்ற நீலவர்ணங்களின் சமரில் 36 – 36 என சமநிலையை இரண்டு பாடசாலைகளும் பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் றோயல் அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 233 ஓட்டங்களை சவால் மிக்க வெற்றி இலக்காக வைக்க அதை எட்டிப்பிடிக்க இரண்டாவது…