இதுவரை தங்கள் தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 8:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை ஆட்பதிவாளர் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் அல்லது காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியாவில் உள்ள கிளைகளில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை விடுதியில் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 10) இரவு பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (மார்ச் 12) கல்னேவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையை கண்டித்தும் மற்றும் சந்தேக நபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரியும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில்…