இலங்கையில் ஹாவெஸ்டர் ஒன்றில் உள்ள ரப்பர் ட்ரக்குகளுக்கு வழங்கப்படும் முதன்முறையானதும் ஒரேயொரு உத்தியோகபூர்வமானதுமான உத்தரவாதத்தை DIMO Agribusinesses நிறுவனம் தனது LOVOL ஹாவெஸ்டர் மூலம் வழங்குகிறது. LOVOL ஹாவெஸ்டர் ரப்பர் ட்ரக்குகளின் ஆயுள் தொடர்பான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, 500 மணிநேரம் வரையான உத்தரவாத காலத்தை வழங்குவதன் மூலம் DIMO நிறுவனத்தின் விவசாயப் பிரிவான DIMO Agribusinesses இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதனுடன் இணைந்தவாறு LOVOL வாடிக்கையாளர்களுக்காக வீடுவீடாகச் சென்று வழங்கும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் DIMO…

மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நடைமுறைக்கு சாத்தியமான சட்டங்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய.
மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நடைமுறைக்கு சாத்தியமான சட்டங்கள் இயற்றப்பட்டுசுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழு வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும் எனவும் இதற்கான அரசியலமைப்பு பேரவைக்கு நியமன பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (மார்ச் 08) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.