இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர (Dushmantha Chameera ) நேற்று(ஏப்ரல் 29) நடைபெற்ற IPL இன் 48வது போட்டியின் போது DC சார்பாக ஒரு அற்புதமான பிடியெடுத்து KKR துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். லோங்- லெக்கில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த சமீர, இடதுபுறமாக முழு நீளமாக பாய்ந்து இந்த பிடியை எடுத்தார். முன்னதாக நான்கு நாட்களுக்கு முன்னர் இலங்கை வீரரான கமிந்து மெண்டிசும் இவ்வாறான ஒரு சிறப்பான பிடியை எடுத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தார்.

வெலிக்கடை சிறையில் உயிரிழந்த இளைஞன் – முழுமையாகப் பிரேத பரிசோதனைக்கு உத்தரவு
வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது இறந்த இளைஞரின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு (JMO) கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மூன்று சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் இளைஞரின் சடலத்தை முழுமையாகப் பிரேத பரிசோதனை செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினரால் செய்யப்பட்ட மேன்முறையீட்டை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இன்று (ஏப்ரல் 09)…