கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
கனடா மற்றும் மெக்சிகோவிற்கு இன்று முதல் 25% வரி
மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25% வரி அதிகரிப்பு இன்று (மார்ச் 04) அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையைத் தவிர்க்க முடியுமா என்பது குறித்து பல வாரங்களாக இருந்த சந்தேகங்கள் முடிவுக்கு வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகன் மற்றும் கனேடிய அதிகாரிகள் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தாலும், இந்த நடவடிக்கை தொடரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவித்தார்.