துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு ஒத்துழைப்பை வழங்கிய மூவர் கைது

மீடியாகொட – தம்பஹிட்டிய பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் கடந்த 3ஆம் திகதி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு இருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் மீடியாகொட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அதற்கமைய, குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு ஒத்துழைப்பை வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீடியாகொட மற்றும் கஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 27, 40 மற்றும் 44 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீடியாகொட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read More

3 ஆண்டு நிதியிடல் திட்டத்தை அறிவித்த உலக வங்கி

இலங்கையில் தொழில் உருவாக்கம் மற்றும் தனியார் துறை வளர்ச்சிக்கான 1 பில்லியன் டொலர் பெறுமதியான 3 ஆண்டு நிதியிடல் திட்டத்தை உலக வங்கி அறிவித்தது. வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டுக்கு அதிக வாய்ப்புகள் உடைய துறைகளான எரிசக்தி , விவசாயம், சுற்றுலா மற்றும் பிராந்திய அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு உலக வங்கி இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பில் உலக வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம்.

Read More

யாழ்ப்பாணம் மாநகர சபை இறுதி முடிவு.

கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்கள் . தமிழ் அரசுக் கட்சி 13 (10 வட்டாரம் + 3 போனஸ்)தமிழ் காங்கிரஸ் 12 (11 வட்டாரம் + 1 போனஸ்)தேசிய மக்கள் சக்தி 10 (4 வட்டாரம் + 6 போனஸ்)ஜ.த.தே.கூட்டணி 04 (2 வட்டாரம் + 2 போனஸ்)ஈ.பி.டி.பி 04 (போனஸ்)ஐக்கிய தேசிய கட்சி 01 (போனஸ்)ஐக்கிய மக்கள் சக்தி 01 (போனஸ்)

Read More

ஈரானில் 2 நகரங்களில் அடுத்தடுத்து வெடி விபத்து

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரின்போது இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான் நகரங்கள் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ஈரானின் இரண்டு நகரங்களில் இன்று அடுத்தடுத்து வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஈரானின் மஷ்கத், கியூம் நகரங்களில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மஷ்கத் நகரத்தில் உள்ள பைக் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல்…

Read More

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை

காஷ்மீர் பகல்காமில் கடந்த 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை, எல்லைகள் மூடல் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்து வருகிறது. தற்போது பாகிஸ்தானில் இருந்து எந்த பொருளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்திய…

Read More

கல்கிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Read More

உரமானியம் கிடைக்காததால் வேதனையில் விவசாயிகள்

சிறுபோகத்திற்கான விளைச்சல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் உரமானியம் இதுவரையிலும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சுமத்துகின்றனர். தற்போது சிறுபோக நெற்செய்கைக்காக பதினைந்தாயிரம் மெற்றிக் டன் உரம் தேவைப்படுவதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. குறித்த உரத்தொகையானது ஒரு மாதத்துக்கு முன்பாகவே வழங்கப்பட்டிருக்க வேண்டுமென அந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. இவ்வாறு உரிய காலப்பகுதிக்குள் உரம் வழங்கப்படாமையால் எதிர்பார்த்தளவு விளைச்சலைப் பெற முடியாது எனவும் விவசாய அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. மானிய விலையில் உரம் வழங்கப்படாமையினால் அதிக விலைக்கு உரத்தை…

Read More

அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 1,250இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை 1,267 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட 24 சோதனை நடவடிக்கைகளில் சந்தேகநபர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 6 பேர் பொலிஸ் அதிகாரிகள் என்றும், அவர்களில் ஒரு…

Read More

இன்று முதல் தேர்தல் பணிகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் இன்று (05) காலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை (06) காலை 7 மணிக்குத் ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியாக 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெற உள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நடைபெறும் தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,…

Read More

24 மணிநேரத்தில் 22 தேர்தல் முறைப்பாடுகள்

இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 22 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  அத்துடன், தேர்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் தொடர்பிலும் 3 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த காலப்பகுதியினுள், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More