JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தகநாமமும் காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life – ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் Title அனுசரணையாளராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. இந் நிகழ்வின் மூன்றாவது பதிப்பு, இந்திய கலாச்சார சங்கத்தால் (ICA) 2026 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வுகளின் வெற்றியின் அடிப்படையில் இப் போட்டி, உள்ளூர் மற்றும்…
நாகொடை துப்பாக்கிச் சூடு ; காயமடைந்த “ரஜவத்தே சத்துவா” போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவரா?
களுத்துறையில் நாகொடை வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை (31) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, நாகொடை வைத்தியசாலைக்குள் இன்று காலை 6.00 மணியளவில் நுழைந்த இனந்தெரியாத ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் களுத்துறை சிறைச்சாலையைச் சேர்ந்த கைதி ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.