JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தகநாமமும் காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life – ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் Title அனுசரணையாளராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. இந் நிகழ்வின் மூன்றாவது பதிப்பு, இந்திய கலாச்சார சங்கத்தால் (ICA) 2026 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வுகளின் வெற்றியின் அடிப்படையில் இப் போட்டி, உள்ளூர் மற்றும்…
வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்த பயிர் நிலங்கள் விவசாயிகள் கவலை.
பொலன்னறுவை உள்ளிட்ட மகாவலி பி வலயத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகியுள்ளன. பொலன்னறுவை மாதுரு ஓயா மற்றும் குடுடா ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் அரலகங்வில 503 பிரதேசம் உட்பட யாய 6 மற்றும் யாய 5 பிரதேசங்களில் நெற்செய்கைகள் சேதமாகியுள்ளன. இதனால் தாங்கள் மிகவும் சிரமத்திற்கும் வேதனைக்கும் உள்ளாகியுள்ளதாக மகாவலி பி வலயத்தின் 503 பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.