போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று திங்கட்கிழமை (15) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 239 கிராம் ஹெரோயின், 678 கிராம் ஐஸ், 04 கிலோகிராம் 282 கிராம் கஞ்சா, 84 கஞ்சா செடிகள், 420…

Read More

சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட அதி சொகுசு கப்பல் இலங்கையை வந்தடைந்தது!

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட அதி சொகுசு கப்பல் ஒன்று நேற்று திங்கட்கிழமை (15) நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த அதி சொகுசு கப்பலானது நேற்றைய தினம் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மால்டா, அரசாங்க கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட  242 மீட்டர் நீளமுள்ள “லுமினாரா” என்ற அதி சொகுசு கப்பலே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட அதி சொகுசு கப்பல் ஒன்று நேற்று திங்கட்கிழமை…

Read More

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் – விசேட பொலிஸ் பாதுகாப்பு

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,   பண்டிகை காலத்தில் நகர் பகுதிகளிலும் வழிபாட்டு தலங்களிலும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும். மேல்மாகாணத்தில் மாத்திரம் சுமார் 2,500 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ்…

Read More

பொலிஸ் சார்ஜன்ட் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

அளுத்கம – மத்துகம வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மோதி  உயிரிழந்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.  வெலிபென்ன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

தெற்கு அதிவேக வீதியில் விபத்து 

தெற்கு அதிவேக வீதியில் அங்குனுகொலபெலெஸ்ஸ – தஹஅமுன பிரதேசத்தில் 168 கிலொமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நால்வர் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்லவிலிருந்து மிரிஸ்ஸ நோக்கி நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன்  பயணித்த வேன் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

பாதுகாப்பு மையங்களில் தங்கி இருக்கும் குடும்பங்களை நேரில் சந்தித்த அமைச்சர் சந்திரசேகர்

அண்மையில் நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த குடும்பங்களையும் குழந்தைகளையும் நேரில் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் கவலைகளையும் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நடந்த உரையாடல்களின்போது, அனர்த்தத்தின்…

Read More

ரூ.100 மில்லியனை பங்கிலாபமாக செலுத்திய திரிபோஷா

லங்கா திரிபோஷா லிமிடெட் நிறுவனம் திறைசேரிக்கு ரூ.100 மில்லியனை பங்கிலாபத்தை செலுத்தியுள்ளது. இது தொடர்பிலான சான்றிதழை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவிடம் திரிபோஷா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க மற்றும் பலர் கையளித்தனர். வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்

Read More

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களிடையே உளநலப் பிரச்சினைகள் அதிகரிப்பு

சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் பெரும்பாலும் தூக்கமின்மை, நீடித்த மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் உள்ளிட்ட உணர்ச்சிபூர்வ அதிர்ச்சியான மனநிலைக்கான அறிகுறிகளைக் காட்டுவதாக மனநல ஆலோசகர் வைத்தியர் விந்தியா விஜயபண்டார தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

Read More

பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்

டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இறந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்புகளைப் பதிவுசெய்வதற்குத் தேவையான சட்ட விதிகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது. பேரிடரின் விளைவாக ஒரு நபர், உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் காணாமல்போனதாக அறிவித்தால், அத்தகைய காணாமல்போனவர்களின் இறப்புகளை அதிகாரபூர்வமாக பதிவுசெய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் நிறுவப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு திணைக்களத்தால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  திணைக்களத்தின் அறிவித்தலின்படி, தேசிய பேரிடர் பகுதிகள் மற்றும் நிர்வாக மாவட்டங்களில் இறப்புகளைப் பதிவுசெய்வதற்கான தற்காலிக…

Read More

யாழ். பல்கலை மாணவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேருக்கு நாளை (12) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.  கனிஷ்ட மாணவர்களை வீடொன்றுக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டதற்காக குறித்த மாணவர்கள் கடந்த மாதம் 29ஆம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் நேற்று (10) மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.  விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சந்தேக நபர்களை நாளை (12) வரை விளக்கமறியலில்…

Read More