உயர் கல்வி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாடசாலை கட்டமைப்பிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அதனை மீள கட்டியெழுப்பல், 2025ம் ஆண்டின் இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்டத்தின் ஆரம்பம், க.பொ.த. உயர் தர பரீட்சையினை நடாத்துவது போன்ற அடிப்படை காரணங்கள் தொடர்பிலான பல விடயங்களை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜி.எஸ். நாலக்க களுவெவ தெளிவுபடுத்தியுள்ளார். அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,  • பெயர் குறிப்பிடப்பட்ட பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை ஆரம்பம்…

Read More

எதிர்க்கட்சி தலைவர் – ரஷ்ய தூதுவருக்கிடையில் விசேட சந்திப்பு

நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , இலங்கைக்கான ரஷ்ய தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.தாகரியன் , எதிர்க்கட்சித் தலைவருக்கிடையிலான இந்த சந்திப்பு செவ்வாய்கிழமை (09)  கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. தித்வா புயலால் ஏற்பட்ட பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஷ்ய தூதுவருக்கு இதன் போது…

Read More

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 868 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (08) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 868 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 869 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 01 கிலோ 229 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 433 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 193 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும்,  642 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 275705 கஞ்சா…

Read More

ஜனாதிபதி தலைமையில் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, நிவாரணம் வழங்குவது மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் காரணமாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்ட முடிந்ததாக தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மக்களின்  அன்றாட வாழ்க்கையை மீளமைக்கும் திட்டத்தை துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்கும், இதுபோன்ற பேரழிவு மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் தேவையான திட்டங்களைத் தயாரிப்பதில் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (08) காலை  நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து…

Read More
zoo

மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி மாயம் !

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி ஒன்று காணாமல் போயுள்ளது. இந்நிலையில், மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி  காணாமல் போயுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர். இந்த மஞ்சள் அனகொண்டா உட்பட மூன்று பாம்பு இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகளை  பெண் ஒருவர் செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்தார்.  இதன்போது, குறித்த பாம்புகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகரிகளால்…

Read More

கிழக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலையினால் 10 பேர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன், 45,420 குடும்பங்களைச் சேர்ந்த 147,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மழை  வெள்ளப் பெருக்கினால்  கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த  நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய வீடுகளுக்குச் சென்றுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம்  செவ்வாய்க்கிழமை  (09) தகவல் வெளியிட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன் 45,420…

Read More

ட்ரம்புக்கு நன்றி தெரித்தார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

தேவையான நேரத்தில் இலங்கையுடன் துணைநின்றமைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார். தித்வா சூறவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு பேரனர்த்தங்களை தொடர்ந்து இலங்கையில் அவசர நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி அளிக்கும் முகமாக  அமெரிக்கா 2 மில்லியன் டொலர்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. அத்துடன்,  நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு அமெரிக்கா இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானங்களையும் அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில்,  C-130 விமானங்களை விரைவாகப் பணியில் ஈடுபடுத்தியமை மற்றும்  2 மில்லியன் அமெரிக்க…

Read More

வீதி விபத்துக்களால் 2570 பேர் உயிரிழப்பு 

இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில்  நாடளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான 2427 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் அவ்வாறான விபத்துகளில் சிக்கி 2570 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்  உதயகுமார வுட்லர் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (9) பொலிஸ் ஊடகப் பிரிவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்துக் கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில்  நாடளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய…

Read More

 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

2025 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 43,329 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தின் முதல் நான்கு  நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 8,989 ஆகும். அத்துடன், ஜெர்மனியிலிருந்து 4,399 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 4,735  சுற்றுலாப் பயணிகளும்,  ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,053 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,128 சுற்றுலாப் பயணிகளும்,…

Read More

சீரற்ற வானிலை ; தொலைத்தொடர்பு கேபிள்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம்!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் தொலைத்தொடர்பு கேபிள்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்குமாறு டயலொக் நிறுவனம், பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல பகுதிகளை பாதித்த அனர்த்த சூழ்நிலையின் விளைவாக, ஃபைபர்-ஆப்டிக் மற்றும் செப்பு கம்பிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தொலைத்தொடர்பு கேபிள்கள் பொது இடங்களில் சேதமடைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வீதி பழுதுபார்க்கும் பணிகளின் போது சில நிலத்தடி தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள்…

Read More