கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு HNB FINANCE PLC நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட HNB FINANCE ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரணம் வழங்கப்பட்டது, மற்றும் அவசர உதவி உணவு உட்பட 8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. பதுளை, கண்டி, நுவரெலியா, நாவலப்பிட்டி, கடுவலை மற்றும் வலபனை ஆகிய பகுதிகளில் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த…
நேபாளத்தில் நிலநடுக்கம்
இமயமலையை ஒட்டிய நேபாளத்தில் இன்று அதிகாலை 1.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவானது. கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை. நேபாளத்தில் சில தினங்களுக்கு முன் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

