ஒரே பார்வையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

கடந்த பொதுத் தேர்தலில் பிரயோகிக்கப்பட்ட வாக்குகளுடன், நேற்று நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குகளை ஒப்பிடும் போது, கட்சிகளுக்கு இடையில் பகிரப்பட்ட வாக்குகளில் பாரிய வித்தியாசங்களை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது மொத்த செல்லுபடியான வாக்குகளில் 6,863,186 வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றது. இது 61.56 சதவீதமாகும். இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மொத்தமாக 4,503,930 வாக்குகளையே பெற்றுள்ளது. இது 43.26 சதவீதமாகும். ஐக்கிய…

Read More

புதிய பாப்பரசர் தேர்விற்கான முதல் வாக்குப்பதிவு நிறைவு

கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை எடுத்துரைக்கும் வண்ணம் கரும்புகை வெளியிடப்பட்டதாக வத்திக்கான் ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. குறித்த வாக்குப்பதிவானது நேற்று (07) இடம்பெற்றிருந்தது. வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஏறக்குறைய 45,000 மக்கள் புதிய பாப்பரசர் தேர்விற்கான முடிவுகளை அறிய ஆவலுடன் காத்திருந்த போது, இரவு 9 மணியளவில் (உரோம் உள்ளூர் நேரப்படி) கரும்புகை வெளியிடப்பட்டு புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற விடயம் அறிவிக்கப்பட்டது.

Read More

இன்றும் நாளையும் நாடாளுமன்றம் கூடும்

நாடாளுமன்றம் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களில் கூடவுள்ளது. இதன்படி, இன்றைய தினம் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதி வரிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஒத்திவைப்பு வேளையில், எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. அத்துடன், நாளைய தினம் ஹேஷா விதானகே, ரோஹண பண்டார, சமிந்த விஜேசிறி மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட 6 தனிநபர் பிரேரணைகள் மீதான விவாதத்திற்கு நேரம்…

Read More

நாட்டில் இன்றும் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளில், மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் தென்…

Read More

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு ஒத்துழைப்பை வழங்கிய மூவர் கைது

மீடியாகொட – தம்பஹிட்டிய பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் கடந்த 3ஆம் திகதி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு இருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் மீடியாகொட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அதற்கமைய, குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு ஒத்துழைப்பை வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீடியாகொட மற்றும் கஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 27, 40 மற்றும் 44 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீடியாகொட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read More

3 ஆண்டு நிதியிடல் திட்டத்தை அறிவித்த உலக வங்கி

இலங்கையில் தொழில் உருவாக்கம் மற்றும் தனியார் துறை வளர்ச்சிக்கான 1 பில்லியன் டொலர் பெறுமதியான 3 ஆண்டு நிதியிடல் திட்டத்தை உலக வங்கி அறிவித்தது. வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டுக்கு அதிக வாய்ப்புகள் உடைய துறைகளான எரிசக்தி , விவசாயம், சுற்றுலா மற்றும் பிராந்திய அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு உலக வங்கி இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பில் உலக வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம்.

Read More

யாழ்ப்பாணம் மாநகர சபை இறுதி முடிவு.

கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்கள் . தமிழ் அரசுக் கட்சி 13 (10 வட்டாரம் + 3 போனஸ்)தமிழ் காங்கிரஸ் 12 (11 வட்டாரம் + 1 போனஸ்)தேசிய மக்கள் சக்தி 10 (4 வட்டாரம் + 6 போனஸ்)ஜ.த.தே.கூட்டணி 04 (2 வட்டாரம் + 2 போனஸ்)ஈ.பி.டி.பி 04 (போனஸ்)ஐக்கிய தேசிய கட்சி 01 (போனஸ்)ஐக்கிய மக்கள் சக்தி 01 (போனஸ்)

Read More

ஈரானில் 2 நகரங்களில் அடுத்தடுத்து வெடி விபத்து

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரின்போது இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான் நகரங்கள் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ஈரானின் இரண்டு நகரங்களில் இன்று அடுத்தடுத்து வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஈரானின் மஷ்கத், கியூம் நகரங்களில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மஷ்கத் நகரத்தில் உள்ள பைக் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல்…

Read More

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை

காஷ்மீர் பகல்காமில் கடந்த 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை, எல்லைகள் மூடல் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்து வருகிறது. தற்போது பாகிஸ்தானில் இருந்து எந்த பொருளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்திய…

Read More

கல்கிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Read More