பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் அருகில் இன்று (11) அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 29 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமுற்றுள்ளார்.

Read More

பண்டிகை காலத்திற்காக விசேட போக்குவரத்து சேவைகள்

பண்டிகை காலத்தில் தூரப் பிரயாணங்களை மேற்கொள்வோரின் வசதி கருதி, விசேட போக்குவரத்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக 500 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அத்துடன் 40 தொடருந்து சேவைகள் மேலதிகமாக சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து, பதுளை, பெலியத்த, திருகோணமலை, கண்டி, அனுராதபுரம் மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கு இந்த விசேட தொடருந்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

Read More

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அநுராதபுரம், மாத்தளை மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல்…

Read More

ஆற்றில் விழுந்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி

கட்டுகஸ்தோட்டை பாலத்திலிருந்து இளம் பெண் ஒருவர் மகாவலி ஆற்றில் விழுந்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு அருகில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஹேரத் (103984), பாலத்திலிருந்து மகாவலி ஆற்றில் குதித்து அந்தை பெண்ணை காப்பாற்றியுள்ளார். இளம் பெண் ஒருவர் மகாவலி ஆற்றில் விழுந்துள்ளதாக பிரதேசவாசிகள் குறித்த அதிகாரிக்கு தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் உயிர் பிழைத்த இளம் பெண் கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயதானவர் என தெரியவந்துள்ளது. அந்த இளம் பெண்…

Read More

கடவுச்சீட்டு அலுவலகத்தின் விசேட அறிவிப்பு

ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (10) விசேட அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், அந்த நாட்களில் மதியம் 12.00 மணி வரை மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒருநாள் சேவைக்காக செயல்பட்டு வந்த 24 மணி நேர சேவை மேற்கூறிய நாட்களில் இயங்காது என்று அறிவிப்பில் மேலும்…

Read More

மியன்மாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. அதற்கான காசோலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தான் ஹடாயிக்கிடம்( (Marlar Than Htaik) இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிதி உதவி வழங்கியதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு இலங்கைக்கான மியான்மார்…

Read More

நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டிலுள்ள நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  இந்த மாவட்டங்களில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாகவே குறித்த பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன்…

Read More

மதுபானசாலைகளுக்கு பூட்டு!

நாடு முழுவதிலுமுள்ள மதுபானசாலைகளை எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.  இந்த திகதிகள் பூரணை, மற்றும் தமிழ், சிங்கள புத்தாண்டு தினங்கள் என்பதால் மதுபானசாலைகளை மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.  மதுவரி திணைக்களத்தின் இந்த சட்டத்தை மீறும் மதுபானசாலைகள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவரி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கை சுற்றுலா அதிகாரசபையால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று (03) நட்சத்திர விடுதிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட…

Read More

பட்டலந்த வதைக்கூடத்தின் பின்னணியில் இருந்தவர்களை நிச்சயம் தண்டிக்குமாறு இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்து!

1977 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை இந்நாட்டை கொலை களமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சியே பட்டலந்த வதைக்கூடத்தின் சூத்திரதாரிகள் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பட்டலந்த வதைக்கூடத்தின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதன் போது தொடர்ந்தும் உரையாற்றுகையில், “நல்ல…

Read More