தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

நாட்டில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய நேற்றைய தினத்துடன்(ஏப்ரல் 02) ஒப்பிடும் போது, இன்றையதினம் (ஏப்ரல் 03) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,970 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 263,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,230 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப்…

Read More

தேசபந்து தென்னகோனுக்கு மீண்டும் விளக்கமறியல்.

தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2023 டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டல் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இதனையடுத்து வெகு நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் தேசபந்து தென்னகோன் சரணடைந்தார்….

Read More

அமெரிக்கா இலங்கைக்கு விதித்துள்ள புதிய பரஸ்பர வரி – சாதக, பாதகங்களை கண்டறிய குழுவொன்றை நியமித்தார் ஜனாதிபதி

இலங்கையில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி நேற்று (ஏப்ரல் 02) அறிவித்துள்ள நிலையில், இந்த வரித்திட்டமானது நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 05ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை சமர்ப்பிக்க நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கி ஆளுநர், முதலீட்டு சபை…

Read More

நவீன போர்க்கப்பலை உருவாக்கிய வடகொரியா

வடகொரியா உருவாக்கி உள்ள புதிய போர்க்கப்பல் ஏராளமான ஏவுகணைகளை தாங்கி செல்லும் வல்லமை கொண்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன. சோங்ஜின் மற்றும் நம்போ கப்பல் கட்டும் தளங்களில் கட்டப்பட்ட 4000 டன் எடை கொண்ட பெயரிடப்படாத கப்பலை, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வடகொரியா கடற்பயணத்தில் ஈடுபடுத்தியது. அமெரிக்காவின் ஆர்லீ பர்க் நாசகாரி கப்பலின் அளவில் பாதியை கொண்டுள்ள வடகொரிய கப்பலில் இருந்து செங்குத்தாக ஏவுகணைகளை ஏவும் அமைப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read More

பட்டலந்த வதைமுகாம் தொடர்பில் மனுவொன்று சமர்ப்பிப்பு

பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் விசாரணை ஒன்றைக் கோரி முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று மனுவொன்றைச் சமர்ப்பித்து அவர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தார். பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தைப் போன்று தற்போதைய அரசாங்கமும் விசாரணைகளை மேற்கொள்ளாமல் இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்கின்றமை மிகவும் வருத்தமளிப்பதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி…

Read More

இலங்கை பொருட்களுக்கு 44% வரி விதிக்கும் அமெரிக்கா

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இது தொடர்பான வரியை அமெரிக்க ஜனாதிபதி நேற்று (02) அறிவித்துள்ள நிலையில்,இந்த வரி நாளை மறுநாள் (05) முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதை நேரலையில் அறிவித்தார். உலகெங்கிலும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக…

Read More

அம்பலாந்தோட்டை முக்கொலை சம்பவம் – ஒருவர் கைது

அம்பலாந்தோட்டை, எலேகொட மேற்கு பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி நடந்த மூன்று கொலைகளுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்து, அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூவரும் உயிரிழந்தனர். அதன்படி, சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது, ​​பியகம பொலிஸ் பிரிவில் நேற்று (02) மாலை அம்பலாந்தோட்டை பொலிஸாரால் ஒரு சந்தேக…

Read More

தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் போட்டியில் கொழும்பு கூடைப்பந்தாட்டக் கழகம் பங்கேற்பு.

இந்திய கூடைப்பதாட்ட சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதலாவது தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பாக கொழும்பு கூடைப்பந்தாட்ட கழக அணி பங்குபற்றுகிறது. இலங்கை, பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து கழகங்கள் பங்குபற்றும் தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதிவரை தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது….

Read More

நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முனைவோர் 150 பேருடன்2025ஆம் ஆண்டிற்கான கெமி புபுதுவ புத்தாண்டுச் சந்தையை BMICHஇல் நடத்திய HNB

இலங்கையின் கிராமப்புற நுண் நிதித் துறையின் முன்னேற்றத்திற்காக தீவிரமாக பாடுபடும் நாட்டின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB ஆறாவது தடவையாக நடத்தும் “HNB கெமி புபுதுவ” புத்தாண்டுச் சந்தை 2025, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நாடு முழுவதுமுள்ள 150 நுண் நிதி தொழில்முனைவோர், தங்கள் உற்பத்திப் பொருட்களை “HNB கெமி புபுதுவ” புத்தாண்டுச் சந்தையில் காட்சிப்படுத்த உள்ளனர். இந்த நிகழ்வு…

Read More

ලින්ක් සුදන්ත සතුටු මුවක් සමග සතුටු සිතක් වෙනුවෙන් 2025 ලෝක මුඛ සෞඛ්‍යය දිනය සමරයි.

ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛතම මුඛ සත්කාර සන්නාමයක් සහ ලින්ක් නැචුරල් හි ප්‍රමුඛ සන්නාමයක් වන ලින්ක් සුදන්ත, 2025 වසරේ ලෝක මුඛ සෞඛ්‍යය දිනය සමරනු ලැබීය. මුඛ සෞඛ්‍යයයේ සහ සමස්ත සෞඛ්‍යයේ වැදගත්කම  අවධාරණය කරමින් මාර්තු 20 වන දින රුවන්පුර ජාතික අධ්‍යාපන විද්‍යාපීඨයේ දී පැවති මෙම වැඩසටහන වෙත 400කට වැඩි පිරිසක් සහභාගී විය. මෙම වසරේ ලෝක මුඛ සෞඛ්‍යය  දින…

Read More