கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு HNB FINANCE PLC நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட HNB FINANCE ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரணம் வழங்கப்பட்டது, மற்றும் அவசர உதவி உணவு உட்பட 8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. பதுளை, கண்டி, நுவரெலியா, நாவலப்பிட்டி, கடுவலை மற்றும் வலபனை ஆகிய பகுதிகளில் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த…
அதிவேக வீதியில் விபத்து இருவர் காயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கௌனிகம பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பாரவூர்தி இரண்டு வேன்கள் மற்றும் ஒரு மகிழுந்து ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தினால் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு எந்தத் தடையும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

