JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமும், இலங்கையின் மூலதனச் சந்தையில் முக்கிய பங்கு வகிப்பதுமான First Capital Holdings PLC, 2025/26 நிதியாண்டில் பல சர்வதேச மற்றும் உள்ளூர் நிலைத்தன்மை சார்ந்த இணைப்புகளைப் (affiliations) பெற்றுள்ளது. இது பொறுப்பான நிதி, காலநிலை பொறுப்புக்கூறல், நிதி உள்ளீர்ப்பு மற்றும் நீண்டகால பங்குதாரர் மதிப்பு உருவாக்கம் ஆகியவற்றின் மீதான அதன் ஆழமான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இக் காலகட்டத்தில் அதன் முக்கிய சாதனைகளில் ஒன்றாக, ஐரோப்பிய நிலைத்தன்மை மேம்பாட்டு அமைப்பின் (European…
மித்தெனிய முத்தரப்பு கொலையுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது
மித்தெனியவில் இடம்பெற்ற மூன்று கொலைகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளினால் இது மேற்கொள்ளப்பட்டது. டுபாய்க்கு செல்ல முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 23 வயதுடையவர் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
