அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஜனாதிபதி எதிர்ப்பாரென எதிர்பார்க்கின்றோம் – திலித் ஜயவீர

வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்ப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால், அவருக்குத் தனது நிபந்தனையற்ற ஆதரவை ‘வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள திலித் ஜயவீர, வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் நகர்வுகளுக்கு இலங்கையின் சோசலிச ஜனாதிபதி எதிர்ப்புத் தெரிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கு எதிராக அமெரிக்க…

Read More

பண்டிகை நாட்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

வரவிருக்கும் பண்டிகை நாட்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இதன்படி, மத சேவைகள் மற்றும் பண்டிகையுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் நடைபெறும் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மதத் தலைவர்கள் மற்றும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுடன் பொலிஸார் ஒருங்கிணைந்துள்ளனர். . தகவல்களைச் சேகரிக்கவும் தேவைப்பட்டால் விரைவான நடவடிக்கை எடுக்கவும் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சிவில் பொலிஸார் நகர்ப்புற மையங்களில்…

Read More

பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவுகளை படிப்படியாக குறைக்க ஆப்கானிஸ்தான் அரசு முடிவு..!!

கண்ணியமே முக்கியம்.. பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவுகளை படிப்படியாக குறைக்க ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கனில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்தனர். இந்நிலையில், பாகிஸ்தானுடனான வர்த்தக வழிதடத்தை முடிந்தவரை புறக்கணித்து பிற நாடுகளிடம் வணிக உறவை அதிகரிக்க ஆப்கானிஸ்தான் வர்த்தகர்களுக்கு தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது….

Read More

 345 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

கடல் வழியாகக் கொண்டுவரப்பட்டு நிலப்பகுதிக்கு மாற்றப்பட்ட 300 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் 8 சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்குக் குற்றப் பிரிவினர் இன்று (12) அதிகாலையில் கைது செய்தனர். கிரிந்த, அந்தகலவெல்ல கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  திஸ்ஸமஹாராம பகுதிக்கு கடல் மார்க்கமாக போதைப்பொருள் கொண்டு வரப்படுவதாக மேல் மாகாண வடக்குக் குற்றப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல அவர்களுக்குத் தகவல் கிடைத்திருந்தது. அதன்படி, ஆழ்கடலில்…

Read More
arrest

போலி சட்டத்தரணி மட்டக்களப்பில் அடையாளம் !

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (11) இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது, கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணி அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் நவம்பர் 24 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மட்டக்களப்புப் பகுதியில் செயற்பட்டு வந்த ஒரு போலி ஆண் சட்டத்தரணி, கடந்த சனிக்கிழமை (08) ஓந்தாச்சிமடம் பிரதேசத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் 42 வயதுடையவர் ஆவார்.  கைது…

Read More

தென்னை பயிர்ச்செய்கை சபையின் விசேட வேலைத்திட்டம்

தென்னை செய்கையில் வெள்ளை ஈ சேதம் உள்ளிட்ட பூச்சிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை கட்டுப்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. முதல் கட்டம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயகொடி தெரிவித்தார்

Read More

இணைய வரலாற்றில் முதன்முறையாக 1600 கோடி கடவுச்சொற்கள் திருட்டு

இணைய வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில், முதன்முறையாக 16 பில்லியன் (1600 கோடி) கடவுச்சொற்கள் திருடு போயிருப்பதாக சமீபத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மில்லியன் கணக்கானோரின் கடவுச்சொற்கள் கசிந்ததால், உலகளவில் அவர்களின் விவரங்களைக் கொண்டு மோசடி, திருட்டு, இணைய வழி திருட்டு முதலானவற்றில் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன. கடவுச்சொற்களைத் திருடி, அவற்றை ஹேக்கர்களிடம் கொடுத்து விடுகின்றனர். திருடப்பட்ட கடவுச்சொற்களை டார்க் வெப் (Dark Web) தளங்களில் விற்று, தவறான பயன்பாட்டுக்கு உட்படுத்துகின்றனர். மின்னஞ்சல், கூகுள்,…

Read More

ஈரானில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வடக்கு ஈரானில் செவ்வாய்க்கிழமை இரவு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செம்னான் மாகாணத்திற்கு தென்மேற்கே 37 கிலோமீட்டர் (23 மைல்) தொலைவில் 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை, ஆனால் செம்னான் மாகாணத்தில் உள்ள சோர்கே நகரைச் சுற்றியுள்ள பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சோர்கேவிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர்…

Read More

தீவிரமடையும் மோதல் – ஈரானுக்கு ஆதரவாக வெனிசுலாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்

ஈரானுக்கு ஆதரவாக வெனிசுலா தலைநகர் காரகாஸில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் – இஸ்ரேல் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆரீன் மற்றும் வெனிசுலா கொடிகளுடன் ஊர்வலம் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், வெனிசுலா உள்துறை அமைச்சர் டியோஸ்டோடா கபெல்லோ, நாடாளுமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போர்க் குற்றவாளி என ரோட்ரிக்ஸ் தெரிவித்தார். வெனிசுலாவும், ஈரானும் மிக…

Read More

ஈரான் – இஸ்ரேலில் இருந்து தங்கள் குடிமக்களை வெளியேற்றும் நாடுகள்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் காரணமாக பல நாடுகள் தங்கள் குடிமக்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளன. இவற்றில் இந்தியா, ஜப்பான், செக் குடியரசு, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை அடங்கும். அதற்கமைய, ஆஸ்திரேலியா ஏற்கனவே ஈரானில் இருந்து சுமார் 1,500 குடிமக்களையும் இஸ்ரேலில் இருந்து சுமார் 1,200 மக்களையும் வெளியேற்றியுள்ளது. சில ஆஸ்திரேலியர்கள் ஏற்கனவே இஸ்ரேலை விட்டு சைப்ரஸுக்கு கப்பல் மூலம் புறப்பட்டுள்ளனர், மற்றவர்கள் அந்த நாடுகளை தரைவழியாக விட்டு வெளியேறியுள்ளனர். சீனா ஈரானில்…

Read More