தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் (29) நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் இன்று தங்கள் பணியிடங்களில் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இம்முறை உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு  கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், 25 மற்றும் 28 ஆம் திகதிகளிலும் இதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. இதேவேளை,…

Read More

சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கி சூடு – 11 பேர் படுகாயம்

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் மிர்ட்டல் நகர கடற்கரை பிரபல சுற்றுலா தலம் ஆகும். அந்த வகையில் வார இறுதியை முன்னிட்டு அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றிருந்தனர். அப்போது ஒருவன் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதனை பார்த்த பொதுமக்கள் அங்கும், இங்குமாக ஓடினர். இந்த தாக்குதலில் 11 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. தகவலின்பேரில் அங்கு விரைந்த போலீசார் இதற்கு பதிலடியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Read More

ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸில் நீண்ட நேர மின்தடை

ஸ்பெயின் தேசம் முழுவதும், போர்த்துக்கல்லின் பெரும்பகுதிகள், பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் வரலாறு காணாத மின்தடை ஏற்பட்டிருப்பதால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்குள் உள்ளாகியுள்ளனர். இதனால் வான் வழிப் போக்குவரத்து, தரை வழிப்போக்குவரத்து, இணைய வசதிகள், தொலைபேசிச் சேவைகள் ஆகியன முடங்கியுள்ளன. ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் தலைநகரங்களிலும் அந்நாட்டு நேரப்படி மதியம் 12.30 மணி முதல் மின் தடை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கியிருப்பதைப் பார்க்கும் மக்கள், எப்போது மின் விநியோகம் சீராகும் என்பது தெரியாமல் தவிப்பதாகவும்,…

Read More

ஐ.பி.எல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம்! சாதனை படைத்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் 14 வயது துடுப்பாட்ட வீரர் வைபவ் சூரியவன்ஷி மிக இளம் வயதில் 20 இற்கு 20 போட்டியொன்றில் சதத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார். அத்துடன் ஐ.பி.எல். வரலாற்றில் இரண்டாவது மிக வேகமான சதத்தைப் பூர்த்தி செய்தவர் என்ற சாதனையையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பாடிய குஜராத்…

Read More

வடகொரியா சர்வதேச சட்டத்தை மீறியதாக தென்கொரியா குற்றச்சாட்டு

நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் படைகள் நுழைந்தன. தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் குர்ஸ்க் பிராந்தியத்தை உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. பின்னர் படைகள் மேற்கொண்டு உள்நுழைவதைத் தடுக்க ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டனர். இதில் ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியாவும் சுமார் 15 ஆயிரம் வீரர்களை அங்கு…

Read More

அரச மற்றும் அரை அரச ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்தது

இலங்கையில் அரசு மற்றும் அரை-அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐ தாண்டியுள்ளது. 2024ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஆரம்ப அறிக்கையின்படி, அரச மற்றும் அரை-அரச துறைகளில் மொத்தம் 1,150,018 ஊழியர்கள் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழியர்களில் 50.5% ஆண்கள் மற்றும் 49.5% பெண்கள் என அறிக்கை குறிப்பிடுகிறது. 2016ஆம் ஆண்டுக்குப் பின்னர், அனைத்து அரச மற்றும் அரை-அரச துறை நிறுவனங்களின் ஊழியர்களின் முழுமையான ஆய்வு கடந்த ஆண்டு…

Read More

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற விருந்து ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், மேற்கு மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் என…

Read More

சமூக ஊடக கணக்குகள் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சஷி மகேந்திரன் அவர்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய ஆறு சமூக ஊடக கணக்குகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய கண்காணிப்பு மற்றும் புலனாய்வு பிரிவுக்கு கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி நேற்று (28) அனுமதி வழங்கியுள்ளார். நீதிபதி பாலேந்திரன் சஷி மகேந்திரன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக, குறித்த சமூக ஊடக கணக்குகளுக்கு ஒன்பது கேள்விகளை அனுப்பி, அதற்கு தொடர்புடைய…

Read More

தபால்மூல வாக்களிப்பு – மூன்றாம் நாள் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளது.   கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்களுக்குக்கு இன்றும் (25) நாளையும் (29) தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல…

Read More

கோடிகளில் ஏலம் போன டைட்டானிக் கப்பல் கடிதம்

உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்குப் புறப்பட்டது. அந்தக் காலத்தில் உலகின் மிகப்பிரமாண்டமான சொகுசு கப்பல் இதுவாகும். ஆனால், தனது முதல் பயணத்திலேயே அந்தக் கப்பல் அட்லாண்டிக் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உலகையே உலுக்கிய இந்த விபத்து ஹாலிவுட் படமாகவும் வெளிவந்துள்ளது. அந்த கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம். இந்நிலையில்,…

Read More