உக்ரைன் அதிபரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றிய டிரம்ப்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. உக்ரைனின் கனிம வளங்கள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடவும், ரஷ்யாவுடனான முரண்பாடுகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்து கலந்துரையாடவும் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், அந்த சந்திப்பில் இரு தரப்பினருக்கும் இடையே காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் நடந்துள்ளது. இதன்போது உக்ரைனுக்கு அமெரிக்கா அதிக ஆதரவை வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ள…

Read More

ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

ஹெரோயின் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (28) கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பி.சி.சி பலாம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More

பயிர் சேதத்தை குறைக்க தேவையான பரிந்துரைகளை வழங்க புதிய குழு

வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்க தேவையான பரிந்துரைகளை பெற சிறப்பு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சு குறிப்பிட்டது அமைச்சர் கே. டி. லால்காந்தவின் பணிப்புரையின் பிரகாரம் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக விவசாய அமைச்சின் செயலாளர் டி. எஸ்.ரணசிங்க பொறுப்பேற்றுள்ளார். இந்தக் குழுவில் 15 பேர் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சர்வதேச மீன் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம்

சர்வதேச மீன் ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது உலக மீன் சந்தையில் 8% பங்கு வகிக்கும் இந்தியா, கடந்த ஆண்டு மீன் ஏற்றுமதியில் 7000 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சர்வதேச மீன் ஏற்றுமதி நாடுகளின் பட்டியலின்படி, கடந்த ஆண்டு, சீனா 67.80 மில்லியன் டன் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்த நிலையில், இந்தியா 18.40 மில்லியன் டன் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்து முதலிடத்தில் உள்ளது.

Read More

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை

இலங்கையில் எரிபொருள் இருப்புக்களில் தட்டுப்பாடு இல்லை என்று தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (1) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தற்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக அனில் ஜயந்த சுட்டிக்காட்டினார்.

Read More

மூடப்பட்ட யால தேசிய பூங்கா

தற்போதைய மழை நிலைமைகள் தணியும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையால் யால தேசிய பூங்காவின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்றும், பூங்காவிற்குள் உள்ள சில ஏரிகளின் கரைகள் உடைந்து சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாக, வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இன்று (மார்ச் 1) முதல் மழை…

Read More

Laugfs எரிவாயு குறித்து வெளியான அறிவிப்பு

மார்ச் மாதத்திற்கான laugfs எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை தெரிவித்தார். அதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 3,680 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More

கோலாகலமாக ஆரம்பமான ஜெர்மனியின் “தெரு திருவிழா”

ஜெர்மனியின் கலாச்சார பாரம்பரியங்களில் ஒன்றான தெரு திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது கொலோன் நகரில் வண்ணமயமான ஆடைஅணிந்து கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பெண்கள் திருவிழா, கவுன்ட் டவுன் உடன் இவ்விழா ஆரம்பமானது இந்த தெரு திருவிழாவில் விதவிதமான ஆடை அணிந்திருந்த பெண்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 20,000 சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போதே குறித்த கைது இடம் பெற்றுள்ளது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Read More

இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் பெறப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டியை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.எஸ்.துறைராசா, உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர்கள் ஆயத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Read More