ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

இந்த ஆண்டின் கடந்த 3 மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 1.03 சதவீதம் வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. அத்துடன் கடந்த பெப்ரவரி மாத இறுதியில் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 6.1 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Read More

ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறந்து வைப்பு

ஆனையிறவு உப்பு தொழிற்சாலை இன்று (29) திறந்து வைக்கப்பட்டது.  இந்த தொழிற்சாலை மூலம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 5 மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுவதாக தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால தெரிவித்தார்.  1937 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில் 1938 ஆம் ஆண்டில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  அதனடிப்படையில் ஏறத்தாழ ஒன்பது தசாப்த பாரம்பரியம் மிக்க ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகள் இன்று முதல் (29) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை ஆனையிறவு…

Read More

விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குகின்றனர் – அஜித் பி. பெரேரா

சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்குச் சாதகமான சாத்தியக்கூறுகள் உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.  ஹிரு செய்திப் பிரிவுக்கு நேற்று வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.  விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்குமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அதற்கான சாத்தியக்கூறுகள் சர்வதேச ரீதியில் உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

Read More

124 கிலோ கேரள கஞ்சா மீட்பு

தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற் பகுதியில் கடற்படையினர் நேற்று (28) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தக் கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். சுமார் 124 கிலோ 392 கிராம் ஈரமான எடையுடன் மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னார், மணல் திட்டு 1 மற்றும் 2 இற்கு இடையிலான கடல் பகுதியில், வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னாவுடன் இணைக்கப்பட்ட சிறப்பு…

Read More

X தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான எக்ஸ் தளத்தை 45 பில்லியன் டொலருக்கு எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளார். 2022 ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கச் செலுத்திய தொகையுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும். எலான் மஸ்க்தனது எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்துக்கே எக்ஸ் தள நிறுவனத்தை விற்பனை செய்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எக்ஸ் ஏ.ஐ நிறுவனமும் எலான் மஸ்க்குக்கு சொந்தமான நிறுவனமாகும். ஆனால் புதிய ஒப்பந்தத்தில் 12 பில்லியன் டொலர் கடன் உள்ளடங்குவதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன….

Read More

ஆபாச காட்சிகளை சமூக ஊடக வலைதளங்கள் மூலம் பகிர்ந்த ஒருவர் கைது

சிறுவர்கள் தொடர்பான ஆபாச காட்சிகளை சமூக ஊடக வலைதளங்கள் மூலம் பகிர்ந்த சந்தேக நபர் ஒருவர், பொலிஸ் சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அரசாங்கத்தால் நிறுவப்பட்ட, காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம் வழங்கிய அறிக்கையில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், பேஸ்புக் மூலம் வெளிநாட்டு பிரஜைகளுக்கு சிறுவர்கள் தொடர்பான பாலியல் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வழங்கிய நபர்…

Read More

ஆண்டுதோறும் நிகழும் மொத்த இறப்புகளில் 83 வீதமானவை தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் ஆண்டுதோறும் நிகழும் மொத்த இறப்புகளில் 83 வீதமானவை தொற்றா நோய்களால் ஏற்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதாரத் தரவுகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 வீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வயது வந்தோரில் 20 வீதமானோர் உயர் இரத்த அழுத்தம் இருப்பதை அறியாமல் ஆண்டுதோறும் அண்ணளவாக 60,000 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களில் 4,000 பேர் ஆண்டுதோறும் இறக்கின்றனர் அல்லது அங்கவீனமடைகிறார்கள் என்று…

Read More

அதிகரித்து வரும் சிவனொளிபாத மலைக்கான யாத்திரியர்கள் – வாகன நெரிசல் கட்டுப்பாட்டை இழந்தது

சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் நல்லதண்ணி – சிவனொளிபாதமலை வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி காரணமாக நேற்று (மார்ச் 28) காலை முதல் கணிசமான எண்ணிக்கையான யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலைக்கு வருகைதந்தவண்ணம் உள்ளனர்.. இதனால் ஏற்பட்ட கடும் வாகன நெரிசல் காரணமாக யாத்திரிகர்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டியுள்ளது. நல்லதண்ணியில் அமைந்துள்ள நான்கு வாகன நிறுத்துமிடங்களும் யாத்திரிகர்களை…

Read More

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (மார்ச் 29) இடம்பெற்றுள்ளது. இதில் ஏழாலை தெற்கை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். கந்தரோடை பகுதியில் வேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும்…

Read More