நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹகராபிட்டிய ஜம்புதென்ன பகுதியில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று(மார்ச் 14) அதிகாலை 1.30 மணியளவில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் மொத்த மற்றும் சில்லறை உணவு பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவல் ஏற்பட்ட மூன்று வர்த்தக நிலையங்களும் ஒரே உரிமையாளருக்கு சொந்தமானது எனவும், இதன்போது வர்த்தக நிலையத்தில் யாரும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதேச மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன்…

அச்சுவேலி பிரதே வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமானது ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனின் வழிகாட்டலில் இன்று (மார்ச் 9) அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த வேலைத்திட்டத்தில் பிரதேச வைத்தியசாலையின் பணியாளர்கள், நோயாளர் நலன்புரி சங்கத்தினர், அச்சுவேலி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், அச்சுவேலி சிற்றூர்தி சங்கத்தினர், சன சமூக நிலைய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த செயற்த்திட்டத்தின் போது அச்சுவேலி பிரதேச சபையின் உதவியுடன் பிரதேச வைத்தியசாலையில் உள்ளக வளாகங்களை…