இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
மின்னுற்பத்தி திட்டங்களில் இருந்து விலகுவதாக அதானி நிறுவனம் அனுப்பிய கடிதம்.
இலங்கையில் உத்தேசிக்கப்பட்ட 2 காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களில் இருந்து விலகுவதாக அதானி நிறுவனம் இலங்கை முதலீட்டு சபையின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதற்கான பின்னணி , ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களினூடாக மின்சார செலவைக் குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அதானி குழுமத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதும் அந்நிறுவனத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து அவர்களுடனான காற்றாலை மின் உற்பத்தி திட்ட ஒப்பந்தத்தை மீள் பரிசோதனைக்கு உட்படுத்தியது. இதனால் அரசு அந்த ஆலைகளுக்கான அனுமதியை வழங்காமல்…