இதுவரை தங்கள் தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 8:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை ஆட்பதிவாளர் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் அல்லது காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியாவில் உள்ள கிளைகளில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது

காற்றின் தரக்குறியீட்டில் மாற்றம்.
கடந்த சில நாட்களாக நிலவிய காற்றின் தரக்குறியீட்டில் ஏற்பட்ட எச்சரிக்கை மாற்றம் தற்பொழுது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மட்டத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இரத்தினபுரி மற்றும் எம்பிலிப்பிட்டிய நகரங்களில் சற்று மோசமாக காற்றின் தரம் நிலவுவதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், உணர்திறன் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.