நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் 20 ஆண்டுகளாக இணைந்துசெயற்படும் Samudhi மற்றும் AMARON
வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் சந்தை மாற்றத்தின் இருபது ஆண்டுகள் கூட்டாண்மையை கொண்டாடுகிறது கொழும்பு, ஜூன் 20, 2025 – AMARON வாகன பற்றரிகளின் இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Samudhi Trading Company (Pvt) Ltd, இந்தியாவின் முன்னணி பற்றறி உற்பத்தியாளர்களில் ஒருவரான அமர ராஜா பற்றறிகள் மற்றும் மொபிலிட்டி லிமிடெட் உடனான தனது கூட்டாண்மையின் 20 வருட கால ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியைக் குறிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லை இன்று கொண்டாடியது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில்,…

