சீனப் பொருட்களுக்கு 145% வரி – அமெரிக்கா விளக்கம்

சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த மொத்த வரி விகிதம் 145% என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (9) விதித்த 125% வரி குறித்து ​​விசேட விளக்கத்தை அளிக்கும் போதே இந்த தகவல் வௌியிடப்பட்டுள்ளது. சீனப் பொருட்களுக்கு முன்னர் இருந்த 20% வரி விகிதம் உள்ளீர்க்கப்படாமலேயே வரி குறித்து நேற்று டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, சீனாப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் புதிய வரி விகிதம் 145%…

Read More

தனியார் ஹெலிகாப்டர் விபத்து.. 06 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற போது நியூயார்க் ஹட்சன் நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது. லோயர் மன்ஹாட்டனின் ட்ரைபெக்கா பகுதியை நியூஜெர்சி சிட்டியுடன் இணைக்கும் ஹாலண்ட் சுரங்கப்பாதை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தகவலறிந்து நியூயார்க் தீயணைப்புத் துறை அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர் இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன

Read More

டிரம்பின் வரி விதிப்பால் கார் நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம்.

டிரம்பின் வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க, கார் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை தென் கொரிய அரசு வழங்கியுள்ளது. கார் நிறுவனங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி உதவியை 9 பில்லியன் டாலரிலிருந்து பத்தேகால் பில்லியன் டாலராக அதிகரித்ததுடன், உள்நாட்டில் கார் விற்பனையை ஊக்குவிக்க, விற்பனை வரியை 5 சதவீதத்திலிருந்து மூன்றரை சதவீதமாக குறைத்துள்ளது. மின்சாரக கார்களுக்கு வழங்கப்படும் மானியமும் 30 சதவீதத்திலிருந்து 80 சதவீதகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Read More

உலக வர்த்தகத்தில் ஏற்பட்ட நெருக்கடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எதிராக 104% சுங்க வரியை உயர்த்தும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவு, இன்று நள்ளிரவு 12:01 மணி முதல் உடனடியாக அமலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். டிரம்ப் நிர்வாகம், சீனாவுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யும் நோக்கில் இந்த “பரஸ்பர சுங்க வரி” கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனா, அமெரிக்காவின் முந்தைய சுங்க வரி உயர்வுக்கு பதிலடியாக 34% கூடுதல் வரியை அமெரிக்க…

Read More

சீனப்பொருட்களுக்கு இன்று முதல் 104% வரி

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 104% வரியை விதித்துள்ளது. இது இன்று (09) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

100 வயதில் தாயான கலபகோஸ் ஆமைகள்

அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியாவில் உள்ள 150 ஆண்டு பழமையான உயிரியல் பூங்காவில், அழிந்துவரும் நிலையில் உயிரினங்கள் பட்டியலில் உள்ள மேற்கு சாண்டா க்ரூஸ் கலபகோஸ் ஆமைகள் முதன்முறையாக குஞ்சு பொறித்துள்ளன. நூறு வயதான பெற்றோருக்கு பிறந்த குஞ்சுகளுக்கு கீரை உணவுகளைக் கொடுத்து பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உயிரியல் பூங்காவுக்கு தாய் ஆமை வந்ததன் 93-ஆவது ஆண்டு தினமான ஏப்ரல் 23-ஆம் தேதி, பொதுமக்கள் பார்வைக்கு குஞ்சுகள் வைக்கப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read More

ட்ரம்ப்பின் அறிவிப்பால் ஆட்டம் கண்ட அமெரிக்க பில்லியனர்கள்

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி பதிலடிகளால் அந்நாட்டின் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ள முதல் 500 பேர் மட்டும், ஒரே நாளில் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர். மார்க் ஜுக்கர்பர்க், ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க் முதற்கொண்டு கிட்டத்தட்ட அமெரிக்காவின் முதல் 500 பெரும் பணக்காரர்கள் 17 லட்சத்து 77 ஆயிரம் கோடி ரூபாய் அளவு நஷ்டத்தை ஒரே நாளில் சந்தித்துள்ளனர். பல நாடுகளுக்கும் பதிலடி வரிகளை தீட்டிவிட்டு, தனது மார் அ லகோ ரிசார்ட்டுக்கு கோல்ஃப் விளையாட்டைக்…

Read More

மெக்சிகோ எல்லையை கண்காணிக்க குதிரைகளைப் பயன்படுத்தும் வீரர்கள்

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மற்றும் மெக்சிகோவின் ச்சிவாவா எல்லையில், கண்காணிப்புப் பணிகளுக்கு அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் குதிரைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு நிலப்பரப்புகளில் தொலைதூரப் பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும், அவசர உதவிகளை விரைவாக கொண்டு செல்லவும் குதிரைகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். சட்டவிரோத குடியேறிகள் மீதான நடவடிக்கை காரணமாக, அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் மார்ச் மாதத்தில் பிடிபட்டவர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Read More

உக்ரைன் போரை நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் – டிரம்ப்

உக்ரைன் மீதான போரை நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ரஷ்ய – உக்ரைன் போர் அர்த்தமற்ற போர் என்றும், அதை நிறுத்துவதற்கான அனைத்துவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். போரில் சராசரியாக வாரம்தோறும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும், அவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றாலும், அவர்களும் மனிதர்கள்தான் என்றும் அவர் தெரிவித்தார்.

Read More

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து ஜனாதிபதியுடன் சந்திப்பு

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த வரி விதிப்பு பின்னணி அடிப்படையிலும், சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையைப் போன்ற நாடுகள் பாரிய அளவில் வரி விதிப்பதால் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. ஏற்பட்டிருக்கும் நிலை தொடர்பில், ஒரு நாடு என்ற வகையில் எவ்வாறு செயற்படுவது மற்றும்…

Read More