பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். கல்னேவ காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் அறிவித்துள்ளார். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விடுதியில் பெண் வைத்தியர் ஒருவர் நேற்று முன்தினம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

மாணவர்களின் பெறுபேறுகளை நோக்காக கொண்டு அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் நடத்தப்படுகின்றன.

2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதனால் அவர்களின் பெறுபேறுகளை அதிகரிக்கும் நோக்கிலும், படத்திட்டத்தினை மாணவர்களுக்கு முழுமையாக வழங்கும் நோக்கிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மேலாதிக வகுப்புகளை வடமத்திய மாகாண கல்வித்திணைக்களம் இலவசமாக செயற்படுத்திவருகின்றது. வடமத்திய மாகாண ஆளுநர் திரு. வசந்த ஜினதாச அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மாகாண ஆளுநர் அலுவலகம், அனுராதபுரம் வலயக் கல்வி அலுவலகம் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவை…

Read More