நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். கல்னேவ காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் அறிவித்துள்ளார். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விடுதியில் பெண் வைத்தியர் ஒருவர் நேற்று முன்தினம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

