நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சிலாபத்தில் கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது.
சிலாபம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்றில் சுமார் 247 கிலோ எடை கொண்ட கஞ்சா பொதிகளுடன் சந்தேகநபர் ஒருவர் சிலாபம் பிராந்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (வெப்ரவரி 25) இரவு சிலாபம் பிராந்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இதன்போது மெரவல பாலத்துக்கருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது காரின் பின்…

