கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலதர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் நபரொருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்துள்ளார். நேற்றிரவு (11) மேற்படி வீட்டில் ஏற்பட்ட தகராறில் நபரொருவர் வீழ்ந்துக் கிடப்பதாக பேருவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்த சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவரை பேருவளை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர் 38 வயதுடைய பேருவளை, வலதர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவ தினத்தன்று உயிரிழந்த நபருக்கும் அவரது திருமணத்துக்கு…

Read More

வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் நால்வர் கைது

600 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர்கள் நால்வர் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சமீபத்திய கைப்பற்றப்பட்ட அதிகளவான சிகரெட் தொகை இதுவாகும் என சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். எமிரெட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்த கொழும்பு வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, பம்பலப்பிட்டிய மற்றும் கொஸ்வத்த பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 30 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்களே இவ்வாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள்…

Read More

பிரபல நடிகை கைது

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி சம்பவத்துடனான நிலுவையில் உள்ள 7 பிடியாணைகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட லொக்கு பெட்டி

பெலாரஸ் நாட்டில் கைது செய்யப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான லொக்கு பெட்டி என அழைக்கப்படும் சுஜீவ ருவன்குமார டி சில்வா குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இன்று காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குறித்த நபர் அத்துருகிரிய பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 8 ஆம் திகதி க்ளப் வசந்த எனப்படும் வர்த்தகர் வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டு, மேலும் பலரைக் காயமடையச் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபராக அடையாளம்…

Read More

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

அரநாயக்க பொலிஸ் பிரிவின் அரம பகுதியில் 10 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து சந்தேகநபர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் டுபாயில் பதுங்கியுள்ள திலினி என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் இந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டில் உள்ள அலுமாரியில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருளை பொலிஸார்…

Read More

பாழடைந்த காணியிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுதாகொட வீதியில் உள்ள பாழடைந்த காணியிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் இரத்மலானை-மஹிந்தாராம வீதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். அவர் கடந்த 30 ஆம் திகதி இரவு வீட்டை விட்டு வெளியேறி இருந்த நிலையில், வீடு திரும்பாத காரணத்தினால் இது குறித்து அவரது சகோதரர்களில் ஒருவர் கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். சடலம் நீதவான் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக…

Read More

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மஞ்சள் தொகை பறிமுதல்

இன்று மண்டைதீவில் இந்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடத்தலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற இருவர் தப்பியுள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.. இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 448 கிலோகிராம் மஞ்சள், யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று மண்டைதீவில் இந்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடத்தலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற இருவர் தப்பியுள்ளதாகவும், அவர்களைத் தேடும்…

Read More

இலஞ்சம் பெற்ற அரச ஊழியர் கைது

6,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கரடியனாறு பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தில் பணியாற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கரடியனாறு பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, இன்று (29) காலை 10:49 மணியளவில் முறைப்பாட்டாளரின் வீட்டில் சந்தேக நபர் பணத்தைப் பெற்றுக் கொண்டிருந்தபோது அவரைக் கைது செய்துள்ளனர். முறைப்பாட்டாளர் கட்டி வரும் புதிய வீட்டை…

Read More

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் கைது

துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை முயற்சி செய்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி மாலை, கொஸ்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றால், லேலிஹெத்துவ சந்திக்கு அருகில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து 6 கிராம் 826 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர், 28 வயதுடைய ஊரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மேலதிக விசாரணைகளில், கடந்த ஏப்ரல் 17…

Read More

பொலிஸாரால் அழிக்கப்படவுள்ள போதைப்பொருட்கள்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட, வழக்கு விசாரணைகள் நிறைவுற்ற 494 கிலோ 48 கிராம் ஹெராயின் போதைப்பொருட்கள் இன்று (28) காலை 10.00 மணிக்கு அழிக்கப்படவுள்ளது. புத்தளம், பாலவி பகுதியில் உள்ள INSEE சிமென்ட் நிறுவனத்திற்கு சொந்தமான எரியூட்டியில் இவைகளை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்திட்சகருமான புத்திக்க மனதுங்க தெரிவித்தார். அதற்கமைய, இன்று (28) காலை குறித்த போதைப்பொருட்கள் புத்தளம், பாலவி பகுதிக்கு அதியுயர் பாதுகாப்பின் கீழ்…

Read More