கிராண்ட்பாஸ் பெண்ணின் கொலை- காரணம் வௌியானது

கடந்த 22ஆம் திகதி கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் அப்பெண்ணின் கணவன் மற்றும் மருமகன் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த பெண் கூர்மையான ஆயுதங்களால் அடித்துக் கொல்லப்பட்டு, அவரது சடலம் அருகில் உள்ள கால்வாயில் கொண்டுச்சென்று வீசப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. 65 வயதான குறித்த பெண், ஆணொருவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளதாகவும், சம்பவத்தன்று அந்நபருடன்…

Read More

போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

கொட்டிகாவத்தை – நாகஹமுல்ல பகுதியில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பவத்தில் 27 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு – வௌியான தகவல்கள்

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 5:35 மணியளவில், குறித்த இளைஞர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை சுட்டதாக தெரியவந்துள்ளது. காயமடைந்த இளைஞர், வட்டிக்கு பணம் வழங்குவது மற்றும் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர்…

Read More

சட்டவிரோத மதுபானத்துடன் மொனராகலையில் ஒருவர் கைது.

மொனராகலை – புத்தல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (ஏப்ரல் 24) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புத்தல முகாமின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதோடு 10 லீட்டர் சட்ட விரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது

5 கோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்திலிருந்து குறித்த போதைப்பொருளை கடத்துவதற்கு முயற்சித்த நிலையில், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயின்றுவரும் 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானம் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்த…

Read More

தெவிநுவர இரட்டைக் கொலை தொடர்பில் ஒருவர் கைது

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவிநுவர ஶ்ரீ விஷ்ணு கோயிலின் தெற்கு வாயிலுக்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி, குற்றச் செயலானது கடந்த மார்ச் 21ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகளை வாகனத்தில் அழைத்துச் சென்றதோடு, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டி அவர்களுக்கு உதவியமைக்காக குறித்த சந்தேக நபர் நேற்று (24) மாலை கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் தலல்ல…

Read More

மக்களைக் கொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது? நாமல் ராஜபக்ஷ

1988 மற்றும் 1989 பயங்கரவாத சகாப்தத்தைக் காணாத இளைஞர்கள் தற்போது நாட்டில் நடைபெற்று வரும் கொலை அலையின் மூலம் அந்தக் காலகட்டத்தைப் பற்றிய புரிதலைப் பெற முடியும் என பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாட்டில் தற்போது கொலை அலை அதிகரித்து வருவதாகவும், குழந்தைகள் முன்னிலையில் தந்தையர்களைக் கொல்லும் கலாச்சாரம் மீண்டும் தோன்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எமது கட்சியின்…

Read More

டேன் பிரியசாத் கொலைக்கும் சகோதரரின் கொலைக்கும் தொடர்பா?

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய காவல்துறையினர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்தனர்.  இந்தக் கொலை சம்பவத்தில் பந்துல பியால் மற்றும் மாதவ சுதர்சன எனும் தந்தை, மகன் இருவர் மீதும் விசாரணைகளின் போது சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து, குறித்த இருவரின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யவும், அவர்களின் தொலைபேசி அழைப்புக்களைப் பதிவு செய்யவும் உத்தரவிடுமாறு காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.  இந்த கோரிக்கையை…

Read More

மாத்தறை சிறைச்சாலையில் அமைதியின்மை

மாத்தறை சிறைச்சாலையில் இன்று (22) பிற்பகல் இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அமைதியின்மை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கைதியை வேறு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டது. ஒரு கூண்டில் இருந்து வெளியே வந்த கைதிகள் குழு ஒன்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதற்றமாக நடந்து கொண்டதாகவும்,…

Read More

டேன் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று இரவு 9.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்தார். வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் வைத்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் சிறு…

Read More