CIDக்கு அழைத்து வரப்பட்டுள்ள பிள்ளையான்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.  மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நபர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் போனமை குறித்த விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.  இந்தநிலையில் அவர் இன்று அதிகாலை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

Read More

இந்திய பிரதமர் இலங்கை எதிர்கட்சித்தலைவருடனும் கலந்துரையாடினர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(ஏப்ரல் 05) சந்தித்தார்.. இதன்போது இந்திய – இலங்கை நட்புறவை வலுவாக்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தனிப்பட்ட அர்ப்பணிப்பும் பங்களிப்பும் பாராட்டுக்குரியவை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளா

Read More

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது

கிரிபாவ பொலிஸ் பிரிவில் வீடொன்றிற்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் மாத்தறை பிரதேசத்தில் வைத்து நேற்று (03) கைது செய்யப்பட்டதாக கிரிபாவ பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் கடந்த 2ஆம் திகதி வீடொன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி 157,000 ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கிரிபாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய, கல்கமுவ…

Read More

வவுனியாவில் மூவர் கஞ்சாவுடன் கைது…!

வவுனியாவில் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (ஏப்ரல் 03) விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா, கணேசபுரம் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன்போதே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 15 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதோடு அதனை வைத்திருந்த கணேசபுரம், கூமாங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 – 32 வயதிற்குட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ,கைப்பற்றப்பட்ட…

Read More

தேசபந்து தென்னகோனுக்கு மீண்டும் விளக்கமறியல்.

தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2023 டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டல் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இதனையடுத்து வெகு நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் தேசபந்து தென்னகோன் சரணடைந்தார்….

Read More

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது

டி-56 ரக துப்பாக்கி ஒன்று, 113 தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (01) காலை இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேகித்த வீதி, வத்தளை பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் அறையில் பெண்ணொருவர் தூக்கிட்ட நிலையில் இருப்பதாக வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், விடுதியின் குளியலறையில்…

Read More

ஆபாச காட்சிகளை சமூக ஊடக வலைதளங்கள் மூலம் பகிர்ந்த ஒருவர் கைது

சிறுவர்கள் தொடர்பான ஆபாச காட்சிகளை சமூக ஊடக வலைதளங்கள் மூலம் பகிர்ந்த சந்தேக நபர் ஒருவர், பொலிஸ் சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அரசாங்கத்தால் நிறுவப்பட்ட, காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம் வழங்கிய அறிக்கையில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், பேஸ்புக் மூலம் வெளிநாட்டு பிரஜைகளுக்கு சிறுவர்கள் தொடர்பான பாலியல் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வழங்கிய நபர்…

Read More

இந்திய மீனவர்கள் 11 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடும்தீவு கடப்பாரப்பில் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.  நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த அனைவரும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் அழைத்துவரப்பட்டு, பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  மேலும், கைதான மீனவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Read More

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீப்பரவலுக்கான காரணம் வெளியானது

நைட்ரிக் அமிலம் கசிந்ததன் காரணமாகவே எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதாகச் சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார்.  எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீப்பரவலினால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்பு மற்றும் மீனவர்களுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கு இழப்பீடு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நேற்று மீண்டும் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  கர்தினால் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட மீனவ சமூகம் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளன.  கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நைட்ரிக் அமிலம் கசிந்ததன்…

Read More

தேவேந்திரமுனை இரட்டைக் கொலை தொடர்பில் வெளியான தகவல்

மாத்தறை – தேவேந்திரமுனை இரட்டைக் கொலை சம்பவத்துக்காக இரண்டு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன்படி, ரீ-56 ரக துப்பாக்கியும் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியும் பயன்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளார். அதன்படி, சம்பவ இடத்திலிருந்து குறித்த கொலைக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளின் வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டிருந்தன. இதேவேளை, கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு மாத்தறை…

Read More