முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மார்ச் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இலஞ்சம் பெற்றுக் கொள்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு அன்று மாலை கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது ஏப்ரல் 01ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு…

Read More

மட்டக்களப்பில் கடலில் மூழ்கிய சிறுவர்கள்

மட்டக்களப்பு, நாசிவன்தீவு கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த 7 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டு, மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (4) மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காவத்துமுனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், உறவினர்களுடன் நேற்று மாலை நாசிவன்தீவு கடற்கரைப் பகுதிக்குச் சென்று கடலில் நீராடிக் கொண்டிருந்தனர். இதன்போது, 7 வயதுடைய ஆண் மற்றும் பெண் சிறுவர்கள் இருவரும் கடல்…

Read More

மட்டக்களப்பில் 4 பேருக்கு மரணதண்டனை

மட்டக்களப்பு சந்திவெளியில் 2017 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். ஜெ. பிரபாகரன் இன்று (21) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி, சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவரை, ரி-56 ரக துப்பாக்கியால் அப்பகுதியில் இயங்கி வந்த ஆயுதக் குழு…

Read More

மட்டக்களப்பு உணவு விடுதிகள், உணவு தயாரிப்பு நிலையங்களில் திடீர் சோதனை

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள் மற்றும் உணவு தயாரிப்பு நிலையங்களில் நேற்று (மார்ச் 11) மாலை பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மாமாங்கம் பொது சுகாதார பிரிவு மற்றும் இருதயபுரம் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகியவற்றிலே இந்த அதிரடி சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அ.முரளீஸ்வரனின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய…

Read More

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் புதிர் நெல் வழங்கும் நிகழ்வு இனிதே இடம்பெற்றது.

“அவனருளாலே அவன் தாள் வணங்கி” இம்முறையும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்தில் புதிர் நெல் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்திற்கு சொந்தமான விவசாயக்காணியில் விளைந்த நெல்ளையும் படுவான் பிரதேச வேளாண்மை செய்கையாளர்களால் ஆலயத்திற்கு வழங்கப்படும் நெல்லையும் ஆலய நிருவாகம் பகிர்ந்து பொதியிட்டு விஷேட வழிபாடுகள் நடாத்தி ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவார்கள். இந்த நிகழ்வு வருட வருடம் இடம்பெறுவதுண்டு. நேற்று(வெப்ரவரி 14) ஆலய பிரதம குருமு.கு.சச்சிதானந்தம் ஐயாவின் தலைமையில் விசேட பூஜைகள் நடைபெற்று புதிர் நெல் முறைப்படி…

Read More