நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
செயற்றிறன் மிக்க முதலீட்டுடன் இலங்கையை மையமாகக்கொண்டு பிராந்திய அபிவிருத்தியை முன்னெடுக்கும் Belluna Lanka
ஜப்பானின் Belluna Co. Ltd. நிறுவனம் இலங்கையில் தனது முதலீட்டின் 10 ஆண்டுகால பூர்த்தியைக் கொண்டாடும் இவ்வேளையில், அந்நிறுவனத்திற்கு முழுவதும் சொந்தமான Belluna Lanka (Pvt) Ltd, இலங்கையை மையப்படுத்தி தெற்காசிய பிராந்தியத்திற்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகின்றது. Belluna “மக்களை மையப்படுத்திய” நிறுவனம் என்பதை, இதன் மூலம் உறுதிப்படுத்துவதுடன் இலங்கையை அதன் பிராந்தியத்தில் ஒரு நம்பகமான தலமாக உறுதிசெய்கிறது. அடுத்தக்கட்ட அத்தியாயமாக இலங்கையின் மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் Belluna Lanka மேலும் விரிவடைதோடு, தெற்காசியாவின்…

