பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை அடையாளம் காணும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

26வது வருடாந்த ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும்நிகழ்வில் “ஆண்டின் ஏற்றுமதியாளர்” விருதை வென்ற MAS
உலகளாவிய மாபெரும் ஆடை- தொழில்நுட்ப நிறுவனமான MAS Holdings, 2023/24 ஆம் ஆண்டிற்கான 26வது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் மதிப்புமிக்க “ஆண்டின் ஏற்றுமதியாளர்” விருது உட்பட பல முக்கிய விருதுகளை மீண்டும் வென்றுள்ளது. மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திஸ்சனாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த மதிப்புமிக்க நிகழ்வு, 2025 பெப்ரவரி 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள BMICHஇல் நடைபெற்றது. MAS நிறுவனம், இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு அளிக்கும் பங்களிப்பை வலியுறுத்தும் வகையில்,…