நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

வீர தீர சூரன் ஒரு வார அதிகாரபூர்வ வசூல்
விக்ரம் நடிப்பில் SU அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படம் கடந்த வியாழன் அன்று ரிலீஸ் ஆகி இருந்தது. நீதிமன்ற வழக்கு காரணமாக முதல் நாள் ரிலீசுக்கு தடங்கல் ஏற்பட்ட நிலையில் மாலையில் தான் முதல் காட்சியே திரையிடப்பட்டது. இந்நிலையில் வீர தீர சூரன் ஒரு வாரத்தில் செய்திருக்கும் வசூலை தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார். உலக அளவில் 52 கோடி ரூபாய் தற்போது வரை வசூல் வந்திருக்கிறதாம். இந்த வாரமும் பெரிதாக போட்டி…