நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வட பிராந்தியத்தில் டிஜிட்டலை ஊக்குவிக்கும் வகையில் வணிக பிரமுகர்களைச் சந்தித்து, அவர்களுடனான நட்புறவை வலுப்படுத்தியுள்ளது
வட பிராந்தியத்தில் உள்ள வணிக பிரமுகர்கள் மத்தியில் டிஜிட்டல் புத்தாக்கங்களை ஊக்குவித்து, அவை குறித்த ஆழமான அறிவைப் பகிர்ந்து கொள்ளும் நோக்குடன், அவர்களுடன் பிரத்தியேகமான சந்திப்பொன்றை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி அண்மையில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சந்திப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள திண்ணை ஹோட்டலில் இடம்பெற்றது. இப்பிராந்தியத்தில் வணிகங்களின் வளர்ச்சிக்கு உதவுவதில் இவ்வங்கி காண்பித்து வரும் அர்ப்பணிப்பில் மற்றுமொரு முக்கியமான நிகழ்வாக இம்முயற்சி அமைந்துள்ளது. வட பிராந்தியத்தில் தெரிவு செய்யப்பட்ட வணிக பிரமுகர்களும், தொழில் முயற்சியாளர்களும் இந்த…

