டெல்லி தெருவோரத்தில் கிரிக்கெட் விளையாடிய முக்கிய புள்ளிகள்

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், ரோஸ் டெய்லர், கபில் தேவ் மற்றும் அஜாஸ் படேல் ஆகியோர் டெல்லியில் தெருவில் கிரிக்கெட் விளையாடும் சிறார்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளனர்.

Read More

களனி பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு

களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் தலைவரும் மூத்த விரிவுரையாளருமான என்.டி.ஜி. கயந்த குணேந்திரா வே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியுள்ளார். நேற்றிரவு (மார்ச் 18) குருநாகலிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த கயந்தவின் வான் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் பயணித்த லொறியின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த அவரது…

Read More

சரணடைந்த தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்..!

தலைமறைவாக இருந்ததாக கருதப்பட்டு வந்த தேசபந்து தென்னகோன் இன்று (மார்ச் 19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாளை (மார்ச் 20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2023ம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த அவர், இன்று(மார்ச் 19) காலை தனது வழக்கறிஞர்களுடன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதை…

Read More

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்மோர் குழுவினர்

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் பூமிக்குத் திரும்புவது எப்போது என்பது குறித்த கால அட்டவணையை நாசா வெளியிட்டுள்ளது. (கீழே இலங்கை நேரப்படி விவரங்கள் தரப்பட்டுள்ளன) மார்ச் 18 காலை 8:15 மணி – சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் ஏனைய குழுவினர் டிராகன் விண்கலத்திற்குள் செல்வார்கள். காலை 10:35 மணி – டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு பிரியும் (Undocking) மார்ச் 19 அதிகாலை 2:15 மணி – பூமிக்கு திரும்புவதற்கான பயணம்…

Read More

பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 பேர் காயம்

சிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர். இன்று(மார்ச் 18) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இ.போ.சபை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி ஒரு மரம், ஒரு கடை மற்றும் ஒரு வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பயணிகள் மற்றும் வீட்டில் இருந்த ஒரு சிறு குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர்.

Read More

“Clean Sri Lanka”திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை திறம்பட பயன்படுத்த ஆலோசனை கூட்டம்

அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயற்படுத்தப்படும் “Clean Sri lanka” வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 05 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை, வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களை அடைவதற்கு திறம்பட பயன்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (மார்ச் 18) இடம்பெற்றது. “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தலைமையில் இன்று கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் உள்ள சார்டட் கட்டிடத்திலேயே இந்த கூட்டம் இடம்பெற்றது. நாட்டில் ஒழுக்கநெறி, சமூக மற்றும்…

Read More

இலஞ்சம் பெற்ற பெண் அதிகாரி கைது

50,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற மதிப்பீட்டு பெண் அதிகாரி ஒருவரை இலஞ்ச ஒழிப்பு ஆணையம் கைது செய்துள்ளது. குருநாகல், பௌத்தாலோக மாவத்தையைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சந்தேக நபரைக் கைது செய்துள்ளது. முறைப்பாட்டாளரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிலம் தொடர்பான பத்திரத்திற்காக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய முத்திரை வரியை குறைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு ஈடாக அவர் இந்த இலஞ்சத்தை கோரியுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் வடமேற்கு மாகாண சபையின்…

Read More

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல்.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கை நேற்று (மார்ச் 17) முதல் ஆரம்பமாகிவுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்குக் கடந்த 3 ஆம் திகதி முதல் வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் 19 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளது. உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை வேட்பாளர்கள் கட்சி சார்பாக ஆர்வத்தோடு தாக்கல்…

Read More

ஏப்ரல் மாதம் முதல் பால்மாவின் விலை அதிகரிப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவுப் பொருட்களின் விலையை 4.7 வீதத்தால் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கற்றின் விலை சுமார் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 1100 ரூபாவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More

M One: Pioneering Integrated Marketing and Brand Experiences

Since its inception in 2008, M One has transformed from a BTL-focused agency into a fully integrated advertising powerhouse. Our commitment to innovation, strategic foresight, and strong client partnerships distinguish us from the competition. We deliver transformative campaigns that resonate with audiences across Sri Lanka and beyond, establishing ourselves as a leader in the marketing…

Read More