பிரபல நடிகை “மாலினி பொன்சேகா” வைத்தியசாலையில் அனுமதி.

இலங்கை சிங்கள சினிமாவின் நடிப்பரசி என மகுடம் சூட்டப்பட்ட மாலினி பொன்சேகாவின் உடல்நிலை மோசமடைந்து நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில காலமாக அவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் அதற்க்கான உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள கவனயீனமாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே நோயின் வீரியம் அதிகரித்தமையினால் தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More

குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே புற்றுநோய் வேகமாகப் பரவும் அபாயம் – வாழ்க்கை முறை மாற்றம்.

தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் துணை இயக்குநர் டாக்டர் ஸ்ரீனி அழகப்பெரும, தற்போது பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் புற்றுநோய் வேகமாக பரவும் அபாயம் இருப்பதாகக் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், கெட்ட பழக்கவழக்கங்களும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை இல்லாததும் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்கள் என்றும் ,பெருங்குடல் மற்றும் மலக்குடலில் புற்றுநோய் வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

வாய்வழி புற்றுநோய் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நாட்டில் வாய்வழிப் புற்றுநோயால் தினமும் மூன்று அல்லது நான்கு பேர் உயிரிழக்கின்றனர் என வாய்வழி மற்றும் முகவாய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த ரத்நாயக்க கூறுகிறார். நாட்டில் ஆண்டுதோறும் 2,000 முதல் 3,000 வரை புதிய வாய்வழி புற்றுநோய்கள் பதிவாகின்றன என்று தெரிவித்துள்ளார் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More