இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கிடையில் 15-வது தடவையாகவும் நடைபெறவுள்ள “Battle of Hindus” கிரிக்கெட் பெருஞ்சமர் போட்டியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்டமான நடைபவணி (Big Match Walk 2026), இன்றைய தினம் (07/03/2026) மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் இளையதம்பி இலங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கானோர்…
யேசு பிறப்பு பெருவிழாவை ஆன்மீக உணர்வுடன் மட்டும் கொண்டாட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அழைப்பு!
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை, அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் ஏழைகளுக்காக அக்கறை செலுத்தும் ஆழமான ஆன்மீக உணர்வுடன் கொண்டாட வேண்டும் என்று இலங்கையில் உள்ள கத்தோலிக்கர்கள் அனைவருக்கும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு விசேட அறிக்கையை வெளியிட்டு இந்த வேண்டுகோளை விடுத்த அவர், “நிலச்சரிவுகளால் ஆயிரக்கணக்கான நமது சக குடிமக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறார்கள், சிலர் அகதி முகாம்களில் உள்ளனர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அணிந்திருந்த உடையைத் தவிர வேறு…

