நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஆரம்பமாகும் தவக்காலம்.
Ash Wednesday – திருநீற்றுப் புதன் என்றால் சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுகிறது. திருநீறு பூசும் நிகழ்ச்சி திருப்பலியின்போது நடத்தப்படுகின்றது. “மனிதா, மண்ணாய் பிறந்த நீ மண்ணுக்கே திரும்புவாய்” என்று கூறி அருட்தந்தையர் நெற்றியில் திருநீற்றைப் பூசுகின்றார்கள்.இந்த சடங்கின் மூலம் இயேசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரமபமாகின்றது. இந்த தவக்காலத்தில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சுத்த போசனமும், 18 வயது தொடக்கம் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் வாரத்தில் ஒருநாளாவது உண்ணா நோன்பு இருப்பது நன்மை….

