நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

“பெருசு” – பெருசா சாதிச்சிடும்
கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 14) இந்திய தமிழ் சினிமாவில் வெளிவந்த பெருசு திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இலங்கை நாட்டின் புகழ்பூத்த இயக்குனர் இளங்கோ ராமநாதன் இயக்கத்தில் வைபோவ், நிஹாரிகா,சுனில் ரெட்டி, பால சரவணன், சாந்தினி மற்றும் குழுவினரின் நடிப்பில் வெளியான “பெருசு” இந்த ரெண்டு நாட்களில் வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இதுவரை பெருசு திரைப்படம் உலகளாவியரீதியில் ரூ. 1.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.இந்த திரைப்படம் முன்னதாக இயக்குனர் இளங்கோ ராமநாதனால் இலங்கையில் “நெலும்…