65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
CLEAN SRILANKA வேலைத்திட்டத்துடன் இணைந்து விசேட பணிகள்
CLEAN SRILANKA வேலைத்திட்டத்துடன் இணைந்து இன்று (11) முதல் கொழும்பு மாவட்டத்தில் வாகன புகை சோதனை தொடர்பான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு மாத காலத்துக்குள் 1000 வாகனங்களில் புகைப் பரிசோதனைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன உமிழ்வு நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் தசுன் கமகே தெரிவித்துள்ளார். மேலும் புகை பரிசோதனையில் தோல்வி அடையும் வாகனங்களுக்கும் பராமரிப்பு உத்தரவு வழங்கப்படும் எனவும்,அதன்படி, 14 நாட்களுக்குள் பராமரிப்பு ஆணையின்படி திருத்தங்கள்…

