புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரல்

புறக்கோட்டையில் உள்ள பேங்க்சோல் வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் தீயை அணைப்பாற்காக ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

Read More

மேர்வின் சில்வா கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். கிரிபத்கொட பகுதியில் வியாபார நிலையங்களை வழங்கிய சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக்கப்பலின் முன்னோட்ட பயணம்.

இலங்கையின் உற்பத்தியாளர்களின் அறிவு, திறன் என்பவற்றால் நவீன தொழில்நுட்பத்துடன் Dhanusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட “maanya mooya” எனும் பெயர் கொண்ட கப்பலுக்கான அதற்கான முன்னோட்ட பயணம் இடம்பெற்று , சோமாலியாவிலுள்ள அரச நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரும் கலந்துகொண்டார். இலங்கையில் உற்பத்தி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் இது முக்கிய மைல்கல்லாகும்.

Read More

கொழும்பில் வாகன மோசடியில் ஈடுபட்ட நபர் கைது.

கொழும்பில் வாடகைக்கு வாகனங்களை கொள்வனவு செய்து விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – அத்துருகிரிய பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். குறித்த நபர் 100இற்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்து மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.இந்த மோசடியை அவர் வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தி மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் பலி.

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலில் தம்புத்தேகம மற்றும் செனரத்க்காம ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் மோதுண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று(வெப்ரவரி 19) காலை இந்த இடம்பெற்றுள்ளதாக தம்புத்தேகம பொலிசார் தெரிவித்துள்ளனர். 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே இவ்வாறு மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பம் தொடர்பில் மேலதிகவிசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கொழும்பில் பொது வாகன தரிப்பிடங்களை பயன்படுத்தும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு.

கொழும்பில் பொது வாகன தரிப்பிடங்களில் 10 நிமிடங்களுக்கும் கூடுதலாக வாகனங்களை நிறுத்தி வைக்கும் சாரதிகளிடமிருந்து மாத்திரமே கட்டணம் வசூலிக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார். பொது வாகன தரிப்பிடங்களில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கும் சாரதிகளிடமிருந்து 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு வாகனங்களை நிறுத்தி வைக்கும் நேர அளவிற்கு ஏற்ப கட்டணத் தொகை அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் அத்தோடு காலை 06.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி…

Read More