தேயிலை தோட்டத்திலிருந்து சடலமொன்று மீட்பு

பொகவந்தலாவ லெட்சுமி தோட்டம் மத்திய பிரிவு 10ஆம் இலக்க தேயிலை மலைக்கு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து நேற்றிரவு (11) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் நேற்று காலை ஆட்டுக்கு புல் அறுக்க சென்றிருந்த நிலையில், இரவு ஏழு மணி வரை வீடு திரும்பவில்லை. பின்னர் தோட்ட மக்கள் இணைந்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது கால்வாய் ஒன்றில் விழுந்து கிடந்ததை கண்ட பொதுமக்கள் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சடலம் சட்ட…

Read More

வவுணதீவில் வீட்டில் உறங்கியநிலையில் குழந்தை இறப்பு.

மட்டக்களப்பு- நாவற்காடு கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்திலிருந்த குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிறந்து மூன்று மாதமான குழந்தை நேற்று (மார்ச் 9) இரவு தாயாரிடம் பால் அருந்திவிட்டு தாவுடனே உறங்கியுள்ளது. இன்று (மார்ச் 10) அதிகாலை குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக எழுப்பிய போது குழந்தை மூச்சு சுவாசம் இல்லாமல் இருந்துள்ளது. உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, குழந்தை முன்னரே இறந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். வவுணதீவு பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய…

Read More

இரத்தக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

காலி மாவட்டம், பிட்டிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடாமுன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக இரத்தக்காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொடாமுன பகுதி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமையசம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேற்படி நபரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது, அவர் இடைவழியிலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிட்டிகல, கொடாமுன பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொடாமுன போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக…

Read More

ரயிலில் மோதுண்டு அனுராதபுர பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு.

கொழும்பில் இருந்து காங்கசந்துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் நேற்று (02) உயிரிழந்துள்ளார். அனுராதபுர போலிஷ் பிரிவில் ஸ்ரவஸ்திபுர பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது ஸ்ரவஸ்திபுர, அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கித்தாரர்கள் மட்டக்குளியில் பொலிசாரால் சுட்டுக்கொலை.

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று(வெப்ரவரி 21) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப் பகுதியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்டுவதற்காக பொலிசார், கைதுசெய்யப்பட்ட இரு துப்பாக்கிதாரிகளையும் அழைத்துச் சென்றபோது பொலிஸாரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்கள் இருவரும் சுட முயன்ற போதே பொலிஸார் பதில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்த…

Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் குற்றவாளி விளக்கமறியலில்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டது. மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதியை தடுத்து வைத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கொழும்பு குற்றப்பிரிவு குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, கொழும்பு பிரதான நீதவான்…

Read More

மித்தெனிய முக்கொலை – கைதானவர்கள் குறித்து வௌியான தகவல்

மித்தெனியவில் அருண விதானகமகே, அவரது மகள் மற்றும் மகனை சுட்டுக் கொண்ட கொலையாளிகள் பற்றிய மேலும் பல தகவல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த முக்கொலைகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மித்தெனிய பொலிஸ் பிரிவின் தெபொக்காவ பகுதியிலும், வீரகெட்டிய பொலிஸ் பிரிவின் அக்ரஹெர சந்தியிலும் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்கள் 37 மற்றும் 39 வயதுடையவர்கள் என்றும், வலஸ்முல்ல மற்றும் வீரகெட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில்…

Read More

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் பலி.

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலில் தம்புத்தேகம மற்றும் செனரத்க்காம ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் மோதுண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று(வெப்ரவரி 19) காலை இந்த இடம்பெற்றுள்ளதாக தம்புத்தேகம பொலிசார் தெரிவித்துள்ளனர். 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே இவ்வாறு மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பம் தொடர்பில் மேலதிகவிசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது, சுரங்கத் தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வாகனத்தை குறிவைத்து குறித்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More