விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு

இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் மாத்திரம் 565 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டில் வாகன விபத்துகளைக் குறைப்பதற்காக கொழும்பில் இன்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பிரதானி, பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட இதனைத் தெரிவித்தார். பல்வேறு தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியேறிச் செல்லும் 7 முதல் 8 பேர் வரை நாளாந்தம்…

Read More

ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயமடைந்த கணவன், மனைவி இருவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கணவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (3) இரவு 7 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதிக்கு அருகில் உள்ள…

Read More

மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட இறக்காமம் பொலிஸ் பிரிவில் உள்ள நெய்னாகாடு சாவாறு பகுதியில் நேற்று (01) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை (31) மாலை நண்பருடன் மீன்பிடிக்கச் சென்ற குறித்த மீனவர் காணாமல் போயிருந்தார். இந்நிலையில், தனது கணவரை காணவில்லை என அவரது மனைவி நேற்று (01) காலை இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து, காணாமல் போன மீனவரின் நண்பரிடம் பொலிஸார்…

Read More

மியன்மார் நிலநடுக்கதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்தது

மியன்மாரை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் மியன்மாரை தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது. இராணுவ ஆட்சியால் ஏற்கனவே நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் மியன்மார் மக்கள், இந்த நிலநடுக்கத்தால் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தால் மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே நகருக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு…

Read More

124 கிலோ கேரள கஞ்சா மீட்பு

தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற் பகுதியில் கடற்படையினர் நேற்று (28) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தக் கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். சுமார் 124 கிலோ 392 கிராம் ஈரமான எடையுடன் மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னார், மணல் திட்டு 1 மற்றும் 2 இற்கு இடையிலான கடல் பகுதியில், வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னாவுடன் இணைக்கப்பட்ட சிறப்பு…

Read More

தேயிலை தோட்டத்திலிருந்து சடலமொன்று மீட்பு

பொகவந்தலாவ லெட்சுமி தோட்டம் மத்திய பிரிவு 10ஆம் இலக்க தேயிலை மலைக்கு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து நேற்றிரவு (11) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் நேற்று காலை ஆட்டுக்கு புல் அறுக்க சென்றிருந்த நிலையில், இரவு ஏழு மணி வரை வீடு திரும்பவில்லை. பின்னர் தோட்ட மக்கள் இணைந்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது கால்வாய் ஒன்றில் விழுந்து கிடந்ததை கண்ட பொதுமக்கள் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சடலம் சட்ட…

Read More

வவுணதீவில் வீட்டில் உறங்கியநிலையில் குழந்தை இறப்பு.

மட்டக்களப்பு- நாவற்காடு கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்திலிருந்த குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிறந்து மூன்று மாதமான குழந்தை நேற்று (மார்ச் 9) இரவு தாயாரிடம் பால் அருந்திவிட்டு தாவுடனே உறங்கியுள்ளது. இன்று (மார்ச் 10) அதிகாலை குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக எழுப்பிய போது குழந்தை மூச்சு சுவாசம் இல்லாமல் இருந்துள்ளது. உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, குழந்தை முன்னரே இறந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். வவுணதீவு பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய…

Read More

இரத்தக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

காலி மாவட்டம், பிட்டிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடாமுன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக இரத்தக்காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொடாமுன பகுதி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமையசம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேற்படி நபரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது, அவர் இடைவழியிலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிட்டிகல, கொடாமுன பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொடாமுன போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக…

Read More

ரயிலில் மோதுண்டு அனுராதபுர பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு.

கொழும்பில் இருந்து காங்கசந்துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் நேற்று (02) உயிரிழந்துள்ளார். அனுராதபுர போலிஷ் பிரிவில் ஸ்ரவஸ்திபுர பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது ஸ்ரவஸ்திபுர, அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கித்தாரர்கள் மட்டக்குளியில் பொலிசாரால் சுட்டுக்கொலை.

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று(வெப்ரவரி 21) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப் பகுதியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்டுவதற்காக பொலிசார், கைதுசெய்யப்பட்ட இரு துப்பாக்கிதாரிகளையும் அழைத்துச் சென்றபோது பொலிஸாரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்கள் இருவரும் சுட முயன்ற போதே பொலிஸார் பதில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்த…

Read More