உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளது. கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்களுக்குக்கு இன்றும் (25) நாளையும் (29) தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல…

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் குற்றவாளி விளக்கமறியலில்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டது. மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதியை தடுத்து வைத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கொழும்பு குற்றப்பிரிவு குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, கொழும்பு பிரதான நீதவான்…