டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…

பேலியகொடையில்அதிநவீன DATS கற்கை நிலையத்தின் மூலம் தொழிற்கல்வியை வலுப்படுத்தும் DIMO
இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக் குழுமமான DIMO, அதன் DIMO Academy for Technical Skills (DATS) கற்கை நிலையத்தினை பேலியகொடைக்கு இடமாற்றம் செய்துள்ளமை தொடர்பில் பெருமையுடன் அறிவிக்கின்றது. இந்நடவடிக்கையானது உலகத்தரத்தில் போட்டித்தன்மை வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை இலங்கையில் உருவாக்குவதற்கும், தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கும் அந்நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் மாற்றகரமான படியைக் குறிக்கிறது. இப்புதிய கற்கை நிலையமானது தொழில்துறையில் நிலவும் கேள்வி மற்றும் பயிற்சி மேன்மை ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளியை நிரப்பும் முன்னோடியான தொழில்நுட்பக் கல்வியில் DATS இன் 35 ஆண்டுகளுக்கும்…