நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா!
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. டுபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்தநிலையில், 265 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்த வெற்றியின்…