கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
சிவராத்திரியை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் தமிழ் பாடசாலைகளுக்கு 27ஆம் திகதி விடுமுறை அறிவிப்பு.
இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரியை முன்னிட்டு வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும், கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக் மட்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள பாடசாலைகளில் 27ம் திகதி வழக்கம் போல் கல்விநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கிழக்கு ஆளுநர் அறிவிப்பு. விடுமுறை நாளுக்குரிய கல்வி செயற்பாடுகளை தொடர்ந்துவரும் சனிக்கிழமை(மார்ச் 1) அன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.