நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
முட்டையின் விலையில் வீழ்ச்சி
சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர். இதன்படி, பல பகுதிகளில் முட்டையின் விலை 20 ரூபாய் முதல் 24 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிது காலத்திற்குப் பிறகு முட்டையின் விலை இந்த அளவுக்கு குறைவடைந்துள்ளதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

